follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

Published on

கனேடிய அரசு நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

வன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

டொமினிகன் குடியரசில் இங்கு பல்வேறு குற்றங்கள், குறிப்பாக செல்வச்சின்னங்கள் அல்லது விலைமதிப்புள்ள பொருட்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதால் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வன்முறை குற்றங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

ஜமைக்காவில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பஹாமாஸ் தீவுகளின் சில பகுதிகளில் கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக உள்ளன. சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் தனியாக செல்லாமல், பாதுகாப்பான சுற்றுலா பகுதிகளில் மட்டுமே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடத்தல்கள் மற்றும் வன்முறை அதிகமாக உள்ளதால் கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கிய சாலைகளில் ஆயுதக் குழுக்கள் வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாடுகளுக்கான பயண திட்டங்களை கவனமாக மதிப்பீடு செய்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுமாறு கனடா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர்...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் – முழுமையான அழிவு ஏற்படவில்லை

கடந்த வார இறுதியில் ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது மேற்கொண்ட அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான...