அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும்

397

ஜப்பானில் இருந்து 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடையுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மேலும் ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு முன்னிரிமை வழங்கி, இரண்டாது டோஸாக குறித்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here