follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2ஸ்வீடன் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி

ஸ்வீடன் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி

Published on

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான பாடசாலை ஒன்று உள்ளது.

கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் பாடசாலையில், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றது. இந்த பாடசாலையில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.

எனினும் ஒரு சில மாணவர்கள் பாடசாலையில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த பாடசாலைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...