ஹிஷாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று

400

ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிசாலினியின் சரீரம் மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

ஹட்டன் – டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று அவரது சரீரம் தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழுவின் முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் சரீரம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் அவ்வைத்தியசாலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here