கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் அதற்கேற்ப எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (04) கலந்துரையாடல் நடைபெற்றது.
கொலன்னாவை வெள்ளத் தடுப்புக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கைகளை எடுத்து பரிந்துரைகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்த கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்குமாறும் பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணராச்சி, கொலன்னாவை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இளைஞர் விவகார பிரதி அமைச்சருமான எரங்க குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.