பிரபல நடிகை விபத்தில் உயிரிழப்பு

447

பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரத்ன நேற்று (30) இரவு வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகை பயணித்த வாகனம் நுவரெலியா – தலவாக்கலை வீதியில் உள்ள லிந்துல பகுதியில் பள்ளத்தில் விழுந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடக படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்ற அவர் மீண்டும் கொழும்புக்கு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்திய சாரதி லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here