follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2கொழும்பிற்கு 100 சொகுசு பஸ்கள்

கொழும்பிற்கு 100 சொகுசு பஸ்கள்

Published on

பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பேருந்துகளின் தொகுதி அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று (16) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெளிவுபடுத்தினார்.

கொழும்பு பெருநகரப் பகுதிக்குள் மூன்று முக்கிய சாலை வழித்தடங்களில் 100 ஏர்-சஸ்பென்ஷன், தாழ்தள, வசதியான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். 100 தாழ்தள பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நாம் முன்மொழிகிறோம். இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபையானது தனது சொந்த நிதியில் 200 தாழ்தள பிரயாணிகள் பேருந்துகளை தனது பேருந்து தொகுதிக்குள் சேர்த்துக் கொள்ளும்.இந்தப் பேருந்துகள் கூட்டாக மெட்ரோ பேருந்துக் கம்பனிகள் (Metro Bus Companies -MBC) எனப்படும் புதிதாக நிறுவப்பட்ட கம்பனிகளின் கீழ் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...