follow the truth

follow the truth

March, 28, 2025
Homeஉள்நாடுகண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம்

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம்

Published on

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக, இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள “காத்தான்குடி” அரச மருத்துவமனையில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம் ஒன்று 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.

இது போன்றதொரு தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரண மையம் கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் “காத்தான்குடி” பிரதேசத்தில் மேற்கொண்டது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெறும்.

இத்திட்டத்தின் ஊடக பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன:
மருத்துவ பரிசோதனைகள்: 4484
கண்ணாடி விநியோகம்: 974
அறுவை சிகிச்சைகள்: 478

மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், பெப்ரவரி 18 முதல் 23ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தெற்கு இலங்கையில் உள்ள “வலஸ்முல்ல” பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

May be an image of ‎2 people, hospital and ‎text that says "‎المحلكةالعربيبةالسعودية المملكة السعودية KINGDOM KINGDOMOF-SAUDI ARABIA الإنسانية الةوالامالالبنسائنية لةوالأعمال KING SALMAN HUMANITA مركزا CENTRE المجاني التطوعي ودية> له المسببة الأمراض 生印に好 unj ர்வை.யில அதற்கான blЛaTи: கவதி இலவச தளன متطوع Vokinteer دبزلت 포구농(소산 SATMPTY SALMAN‎"‎‎

May be an image of 2 people, slow loris, hospital and text

May be an image of 2 people, clothes iron, hospital and textMay be an image of 4 people, people studying, dais and text

May be an image of 1 person, hospital and text

May be an image of ‎2 people, hospital and ‎text that says "‎السعودية العربية المملكة KINGDOM OF SAUDI ARABIA الإنسانية gااعمال زمنمشائعماس# سلمان KING HUMANITARIAN RELIEF CENTRE ورتاه ol المجاني التطوعي السعودة والأمراض العمي иpyH лApbl1 aDas 3am தப்பதற்கான வதியின் o品 信用必う 09 SAROJO jar 6apaH நிேட்ச்சிதி நிட்டம் الصلد الشريك :من بدعم سريلانكا كتانكودي المكان p2025 فبراير 5- 0 التاريخ‎"‎‎

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – சுகாதாரம் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Mr. Paitoon Mahapannaporn) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர்...

சீரற்ற காலநிலை – பனாமுர பகுதியில் பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பனாமுர...

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...