இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும், பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், சிற்றுண்டி வகைகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.