பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பஹ்ரைனில் ஸ்பான்சர் இல்லாமல் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின் கீழ், எந்த சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் பஹ்ரைன் நுழைவு விசாவை வேலைவாய்ப்பு அல்லது குடியிருப்பு அனுமதிப்பத்திரமாக மாற்ற அனுமதிக்கப்படமாட்டார்.
இருப்பினும், சுற்றுலா விசாவை ஸ்பான்சருடன் பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெப்ரவரி 13, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில், வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசாக்கள் மூலம் பஹ்ரைன் இராச்சியத்திற்குள் நுழைவதைத் தடை செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின் கீழ், எந்தவொரு வெளிநாட்டவரும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு ஸ்பான்சர் இல்லாமல் பஹ்ரைன் நுழைவு விசாவை வேலைவாய்ப்பு குடியிருப்பு அனுமதிப்பத்திரமாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் பஹ்ரைனில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு குறித்த பொய்யான வாக்குறுதிகளின் கீழ் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்துவதை தூதரகம் கவனித்துள்ளது.
சுற்றுலா விசாக்களில் பஹ்ரைனுக்கு வந்து நீண்ட காலமாக அங்கேயே தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான கோரிக்கைகள் கிடைத்து வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், எந்தவொரு காரணத்திற்காகவும் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, ஸ்பான்சர் மற்றும் பணியகத்தில் பதிவு இல்லாமல் பஹ்ரைனில் வேலை தேட வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளிநாட்டு சமூகத்தை பணியகம் கேட்டுக்கொள்கிறது.