follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1புனித ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

புனித ரமழான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

Published on

புனித ரமழான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது.

அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள்.

நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார்.

புனித ரமழான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமழான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும்.

ரமழான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஸகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள் ஆகும்.

பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, ஸஹர் என அறியப்படுகிறது.

அதன்பின், சூரியன் மறைந்ததும் மாலை நோன்பை முடிப்பதற்கு முன்பு வரை எதையும் உண்ண மாட்டார்கள், தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். இது இஃப்தார் எனப்படுகிறது.

இந்த இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் ஸஹர் உணவை முடித்து, நோன்பைத் தொடங்க வேண்டும் மற்றும் மாலையில் இஃப்தார் உணவை உண்டு, நோன்பை முடிக்க வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...