“No More Rain (In This Cloud)” மற்றும் “Wish I Didn’t Miss You” போன்ற ஹிட் பாடல்களுக்குப் பெயர் பெற்ற உலகப் புகழ்பெற்ற பாடகி ஆங்கி ஸ்டோன், கார் விபத்தில் இறந்தார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 63 வயது.
கடந்த வெள்ளிக்கிழமை அலபாமாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர் இந்த விபத்தை சந்தித்தார்.
விபத்து நடந்தபோது வேனில் ஒன்பது பேர் இருந்ததாகவும், மற்றவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கரோலினாவின் கொலம்பியாவில் பிறந்த ஸ்டோனின் நான்கு தசாப்த கால பொழுதுபோக்கு வாழ்க்கை 70களின் பிற்பகுதியில் “Funk You Up” என்ற ஹிட் பாடலுக்குப் பின்னால் உள்ள முன்னோடி பெண் ராப் குழுவான The Sequence இனது உறுப்பினராகத் தொடங்கியது.
பின்னர் அவர் 1999 இல் “Black Diamond” மற்றும் 2001 இல் Mahogany Soul” உள்ளிட்ட ஆல்பங்களுடன் ஒரு தனி கலைஞராக R&B இசையில் நிலைத்தவர்.