இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கென பிரத்யேக செயலியொன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டொக்கிற்கு போட்டியாகத் தனி செயலியை அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து மெட்டா ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் மெட்டா நிறுவனம் புதிய வீடியோ எடிட்டிங் செயலியான ‘EDITS’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
இதுவும் கூட டிக் டொக் நிறுவனத்தின் வீடியோ எடிட்டிங் தளமான ‘CapCut’-ன் பயனாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் மெட்டா நிறுவனத்தின் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2018-ல் மெட்டா நிறுவனம், டிக் டொக்கிற்கு போட்டியாக Lasso என்ற வீடியோ ஷேரிங் செயலியை அறிமுகம் செய்தது.
ஆனால் அப்போது அது வெற்றிகரமாக இல்லை என்பதால் பின்னர் அந்நிறுவனம் மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.