follow the truth

follow the truth

March, 28, 2025
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி : 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா- நியூசிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி : 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா- நியூசிலாந்து

Published on

எட்டு நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19ம் திகதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் கடந்த 2ம் திகதி முடிவடைந்தது.

லீக் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. கடந்த 4ம் திகதி துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. லாகூரில் நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

இறுதிப்போட்டி வருகிற 9ம் திகதி துபாயில் நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. 2000-ம் ஆண்டு கென்யாவில் 2-வது ஐ.சி.சி. நாக் அவுட் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-நியூ சிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதுவரை 8 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்றுள்ளன. தற்போது தான் முதல் முறையாக ஏற்கனவே இறுதிப்போட்டியில் மோதிய அணிகள் மீண்டும் மோதுகின்றன.

இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2000,2002,2013,2017 ஆகிய ஆண்டுகளில் முன்னேறி இருந்தது. இதில் 2002,2013-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நியூசிலாந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 2000,2009-ல் இறுதிப்போட்டியில் ஆடியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐதராபாத் – லக்னோ அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள்...

ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேற்று நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அசாம்...

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி

எதிர்வரும் 2026ம ஆண்டு 23-வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 48...