follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP2ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா பரிசீலனை

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா பரிசீலனை

Published on

உக்ரைனுடன் போர் நிறுத்தம் மற்றும் அமைதி உடன்படிக்கை எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்திருந்த டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் (07) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த போது குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் வலுசக்தி அமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா நேற்றைய தினம் தாக்குதலை நடத்தியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கார் மற்றும் ஒரு நூலகம்..- அமைச்சர் செனவி..

ஒவ்வொரு குடும்பமும் ஒரு காரையும் நூலகத்தையும் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர்...

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார...