படலந்த ஆணைக்குழு அறிக்கை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இன்று (11) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
அது தொடர்புடைய ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.