follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுதீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டம்

தீ அணைப்புச் சேவைக்காக தேசிய திட்டம்

Published on

சேவை வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்புப் பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் பக் மாதத்தில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை கண்காட்சிக்காக பெரஹெரவிற்காக தீயணைப்புத் பிரிவினால் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தற்போதுள்ள பிரச்சினைகளைக் குறைத்து, பிற பண்டிகை சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் சேவைக்கு திறமையான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது காணப்படும் மனித வளங்கள் மற்றும் தொழில்நுட்ப பற்றாக்குறை காரணமாக திறமையான சேவையை வழங்குவது ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று கண்டி தீயணைப்பு சேவை பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதவளப் பற்றாக்குறை, தொழில்நுட்ப மற்றும் நீர் விநியோகம் என்பவற்றின் போது ஏற்படும் சிக்கல்கள் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் சேவைகளைச் செய்து வருவதாக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை (VIDEO)

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...