follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2ட்ரம்ப்பின் ஆலோசனைகளை கேட்குமாறு காஸா மக்களுக்கு 'இறுதி எச்சரிக்கை' விடுக்கும் இஸ்ரேல்

ட்ரம்ப்பின் ஆலோசனைகளை கேட்குமாறு காஸா மக்களுக்கு ‘இறுதி எச்சரிக்கை’ விடுக்கும் இஸ்ரேல்

Published on

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், இப்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

காசாவில் சமீபத்தில் தான் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்திருந்த நிலையில், இப்போது தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், காசா மக்களுக்கு இஸ்ரேல் கடைசி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாகச் சொல்லி இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வான்வழித் தாக்குதலை ஆரம்பித்தது. இந்தச் சூழலில் இஸ்ரேல் அடுத்த கட்டமாக தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

மத்திய மற்றும் தெற்கு காசாவில் குறிப்பிட்ட இடங்களைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. முக்கியமான பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்று வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தைக் கைவிட்ட இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. அந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் காசாவில் கொல்லப்பட்டனர். இந்த வான்வழித் தாக்குதலுக்கு மறுநாளே இஸ்ரேல் இந்த தரைவழி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்தவும் வடக்கு மற்றும் தெற்கு காசா இடையே பஃபர் மண்டலத்தை உருவாக்கவும் மத்திய மற்றும் தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்” என்றார்.

இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “காசா மக்களே, இது உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசனையைக் கேளுங்கள். பணய கைதிகளை திருப்பி அனுப்பி ஹமாஸை உங்கள் மண்ணில் இருந்து அகற்றுங்கள். அதன் பிறகு உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும். அப்போது தான் உங்களால் உலகின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...