எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நாடளாவிய ரீதியில் இன்று(25) முதல் விசேட சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்கள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.