follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுகொல்கத்தா அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Published on

வெங்கடேஷ் அரைசதம் விளாச, கொல்கத்தா அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ், நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பினை தெரிவு செய்தார்.

கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் (7), குயின்டன் டி காக்(1) ஜோடி மோசமான துவக்கம் கொடுக்க, 16/2 ஓட்டங்கள் என திணறியது.

பின் கெப்டன் ரஹானே, ரகுவன்ஷி இணைந்தனர். கம்மின்ஸ், ஷமி பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ரஹானே, சிமர்ஜீத் சிங் பந்திலும் சிக்சர் அடித்து மிரட்டினார். இவருக்கு சூப்பர் ‘கம்பெனி’ கொடுத்தார் ரகுவன்ஷி. ஷமி பந்தில் பவுண்டரி, சிமர்ஜீத் பந்தில், சிக்சர் என விளாசினார். இந்த ஜோடி 51 பந்தில் 81 ஓட்டங்கள் எடுத்த போது, ரஹானே (38), ஆட்டமிழந்தார்.

ரகுவன்ஷி 43 ஓட்டங்கள் எடுத்த போது, ஜீஷான் பந்தில் கொடுத்த பிடியில், நிதிஷ் குமார் நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய இவர், 30 பந்தில் அரைசதம் எட்டினார். பிரிமியர் தொடரில் இவரது இரண்டாவது அரைசதம் இது. அதே வேகத்தில் ரகுவன்ஷி (50), கமிந்து மெண்டிஸ் பந்தில், ஹர்ஷல் படேலின் ‘சூப்பர்’ கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.

வெங்கடேஷ், ரிங்கு சிங் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கம்மின்ஸ் வீசிய 19 வது ஓவரில் வெங்கடேஷ். 3 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. வெங்கடேஷ் 25 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 29 பந்தில் 60 ஓட்டங்களை (ஸ்டிரைக் ரேட் 206.89) எடுத்து ஹர்ஷல் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரசல் (1) ரன் அவுட்டாக, கொல்கத்தா அணி 20 ஓவரில் 200/6 ஓட்டங்களை குவித்தது.

கடின இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வைபவ் அரோரா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்த அபாயகரமான ஹெட் (4), 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவை (2), ஹர்ஷித் வெளியேற்றினார். மீண்டும் வந்த வைபவ், இஷான் கிஷானை (2) வீழ்த்த, ஐதரபாத் அணி 9/3 ஓட்டங்கள் என தள்ளாடியது. நிதிஷ் குமாரும் (19) நிலைக்கவில்லை.

நரைன் பந்தில் கமிந்து மெண்டிஸ் (27) ஆட்டமிழந்தார். கிளாசன் 33, கம்மின்ஸ் 14 ஓட்டங்களை எடுத்தனர். ஐதராபாத் அணி 16.4 ஓவரில் 120 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

‘டி-20’ அரங்கில் ஒரு அணிக்காக 200 விக்கெட் சாய்த்த இரண்டாவது பவுலர் ஆனார் சுனில் நரைன். கொல்கத்தா அணிக்காக இவர் இம்மைல்கல்லை எட்டினார். முதலிடத்தில் சமித் படேல் (208, நாட்டிங்காம்ஷயர்) உள்ளார். கிறிஸ் உட் (199, ஹாம்சயர்), மலிங்கா (195, மும்பை), டேவிட் பெய்ன் (193, கிளவ்செஸ்டர்ஷயர்) அடுத்து உள்ளனர்.

கொல்கத்தா அணி நேற்று ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 122/4 ஓட்டங்கள் மட்டும் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் வெங்கடேஷ், ரிங்கு சிங் ரன்மழை பொழிய, 78 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 20 ஓவரில் 200/6 ஓட்டங்களை குவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...