follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைப்பாடுகளில் அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைப்பாடுகளில் அதிகரிப்பு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை பதிவாகியுள்ள குறித்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நேற்று முன்தினம் மாலை 4.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 95 முறைப்பாடுகளும், வேறு வகையான சம்பவங்கள் தொடர்பில் 7 முறைப்பாடுகளுமாக 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் கிடைக்கப்பெற்ற 1,490 முறைப்பாடுகளில் 1,319 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான அஞ்சல் வாக்களிப்பு தினங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்த அஞ்சல் வாக்களிப்புகள் இம்மாதம் 24ஆம், 25ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேநேரம் வேட்பு மனு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுகளை வழங்கியுள்ள 102 உள்ளூராட்சி மன்றங்களது வாக்குச் சீட்டுகள் மீண்டும் அச்சிடப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...