உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 06 ஆதரவாளர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், மார்ச் 03 முதல் இதுவரை மொத்தம் 260 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அந்த முறைப்பாடுகள் தொடர்பாக 23 வேட்பாளர்களும் 92 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 21 என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.