உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 3,216 நடமாடும் ரோந்துகள் இயங்குகின்றன.
மேலும், பாதுகாப்புக்காக 65,000 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவைக்கேற்ப, இதற்காக இராணுவத்தினரின் உதவியும் பெறப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.