follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1முதல் மூன்று மாதங்களில் 1,000 இற்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

முதல் மூன்று மாதங்களில் 1,000 இற்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

Published on

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு அதிபர், தொழில் அமைச்சின் அதிகாரி, ஒரு கள அதிகாரி மற்றும் ஒரு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

இதற்கு மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதி அமைச்சில் பணியாற்றும் ஊழியர், இறைவரித் திணைக்கள மதிப்பீட்டு அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மாத்திரம் 24 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் 21 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...

தேர்தல் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல்...

வெப்பமான காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை

கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின்...