அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், இந்த வரிவிதிப்பை உடனடியாக செயற்படுத்துமாறு வணிகவரித்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மீண்டும் திரைப்படத் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்கு ஆதரவைக் காட்டும் விதமாக, பிற நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான வரிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.