இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 22 ஆம் திகதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஊடகங்களுக்கு அளித்த தனது கருத்துக்களில் கூறியுள்ளார்.
இதற்குக் காரணமானவர்கள் நம்பகமான மற்றும் சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.