UPDATE – 09.30
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது.
ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.