கொத்மலை – கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்டதா, இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் கொத்மலை காவல்துறையால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
விபத்தால் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 60 முதல் 70 பேர் வரை பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.