இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தொடரின் மீதமுள்ள போட்டிகள் பெங்களூர், ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
முதல் போட்டியாக மே 17 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.
இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக மே 9 ஆம் திகதி இந்தத் தொடர் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.