சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக் காலத்தில் சிரியா மீது விதிக்கப்பட்ட நீண்டகால அமெரிக்கத் தடைகள் விரைவில் நீக்கப்படும்.