வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை சேர்ந்த 19 மற்றும் 28 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன மற்றொரு நபரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.