follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை - பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

Published on

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறுகையில்;

இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை.

இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...