பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டி.ஜே. இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.