தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 553 வளாகங்கள் சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், 153 பேர் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் ஆய்வு செய்யப்பட்டதாகவும், நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய 10,591 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.