நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“இப்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை அனுமதி அளித்தது. அபராதம் செலுத்துவதற்குப் பதிலாக, அனைவரும் கவனமாக வாகனம் ஓட்டவும், சீட் பெல்ட் அணியவும், விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.