இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவிருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகளில் பயணிக்கக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஏற்கனவே சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமாகும் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, மக்களின் வாழ்வினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடைமுறைப்படுத்துவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தல் துண்டு ப் பிரசுரங்களைப் பகிர்ந்தளிக்கும் வேளையில் அமைச்சர் உறுதியளித்தார்.