follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார்.

கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் தங்கள் தந்தைக்கு மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்று கூறினர்.

தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள், “அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார், வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசுகையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.

ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம்” என்று கூறினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...