follow the truth

follow the truth

June, 21, 2025
Homeவிளையாட்டுபுபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

Published on

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 1993 முதல் 1994 வரை இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிறந்த விக்கெட் காப்பாளர் ஆவார்.

இவர் இலங்கைக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை மூன்று வருட காலம் அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் லா, மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து நடத்திய ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கிண்ண அணியை வழிநடத்திய பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் பதவி விலகியதை அடுத்து, புபுது தசநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில்...

பெத்தும் நிஸ்ஸங்க சதம்

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட...

பெண்கள் ‘டி-20’ உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

பெண்களுக்கான 'டி-20' உலக கிண்ண அட்டவணை வெளியானது. பைனல் (2026, ஜூலை 5), லார்ட்சில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...