follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் - ஜனாதிபதி

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

Published on

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பிரிந்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றிணைய முயல்கின்றன.

அவ்வாறான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவிருந்தால், அவ்வாறான தேர்தலை நாளைய தினமே நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்துக்களில் உள்ள தவறுகளை மாத்திரமே எதிர்க்கட்சியினரால் சுட்டிக்காட்ட முடிகிறது.

இந்தநிலையில் 152 உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்பத்திலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.

ஒரு சிலருக்கே ஆட்சியமைக்குமாறு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் வாக்குகளை வழங்கினர்.

ஏனையோரை வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களைப் பார்வையிட்டு வருவதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, மக்களுக்கு பணியாற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

சிதைவுகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்கள் ஆணைக்குச் சவால் விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன்படி, மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முயற்சி முறியடிக்கப்படும்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...

கொத்மலையில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து ஆய்வுக்கு

கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத்...