follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Published on

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50% வீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு இது குறித்து அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...