follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

இருப்பினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினையும் ஒரு நிபந்தனையாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடும் போது ஷெபாஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் இந்தியா ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

பதில் பாதுகாப்பு அமைச்சர் – துருக்கிய தூதுவர் சந்திப்பு

துருக்கி குடியரசின் தூதுவர், மேதகு செமிஹ் லுட்ஃபு துர்குட், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி

கொழும்பு - மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு இனந்தெரியாத இருவர் நபரொருவரை...