மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில் 90 இன்னிங்ஸ்களில் 2,265 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
அவர் 5 சதங்களையும் 11 அரை சதங்களையும் அடித்துள்ளார்.
தலைவராக சேஸின் முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு 50வது டெஸ்ட் போட்டியாகும்.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் மேற்கிந்திய தீவுகளுக்காக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை.
மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக பணியாற்றிய கிரெய்க் பிராத்வைட், கடந்த மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகினார்.