இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவி அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்து, அதன் முடிவுகளை அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இன்று (19) முதல் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய அவர் இன்று முதல் முறையாக குழு முன்பு ஆஜராகவுள்ளார்.
இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை எண் 8இல் கூடவுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடி, விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.