கொழும்பு, கொட்டஹேனவில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, அந்த மாணவி படித்த பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக் கல்லூரியின் அதிபர் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிகமாக அதிபரின் பணிகளைச் செய்ய கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2024) அந்தப் பாடசாலையில் ஒரு ஆசிரியர் மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.