வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த ஆணைக்குழு அதிகாரிகள், பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது அவரைக் கைது செய்தனர்.
காணி தொடர்பான விவகாரம் ஒன்றிற்காக இந்த இலஞ்சம் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (22) வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.