follow the truth

follow the truth

May, 23, 2025
Homeலைஃப்ஸ்டைல்படிக்கும்போது தூக்கம் வருவது ஏன் தெரியுமா?

படிக்கும்போது தூக்கம் வருவது ஏன் தெரியுமா?

Published on

குழந்தைகளே.. புத்தகத்தை கையில் எடுத்து உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? இது நமக்கு மட்டும்தான் நடக்குதா? இல்லை எல்லோருக்கும் நடக்குதா? என்று தோன்றுகிறதா?

இது அனைவருக்கும் நடக்கிற ஒரு செயல் தான். அது ஏன் நடக்கிறது என்கிற காரணத்தை அறிந்து கொள்வோம்.

படிக்கும்போது நாம் உட்காரும் முறை தான் தூக்கத்தை வரவழைக்கிறது. அசையாமல் அப்படியே ஒரே இடத்தில் அமர்ந்துவிடக்கூடாது. இப்படி ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்கிறபோது தசைகளுக்கு செல்கின்ற ரத்த ஓட்டம் தடைபடுகிறது. தேவையான ரத்தம் கிடைக்காததால் ரத்தத்தை கொண்டு வருகிற ஆக்சிஜனும் கிடைக்காமல் போகிறது. அதனால் தசைக்கலங்கள் காற்றில்லாத சுவாசத்தை தொடர்கிறது.

ஆக்சிஜன் இல்லாத சுவாசத்தின்போது தசைக்கலங்களில் உள்ள சேமிப்பு உணவு அரைகுறையாக எரிக்கப்படுகிறது. அதனால் லாக்டிக் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் ரத்தத்தில் கலந்து அதில் உள்ள ஆக்சிஜனுடன் வினை புரிகிறது. அப்போது மூளைக்குச்செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. அதனால் மூளை களைப்பாகி தூங்கி விடுகிறது. எனவே படிக்கிறபோது ஒரு இடத்தில் இருந்துவிடாமல் அவ்வப்போது எழுந்து நடப்பது, சிறிய இடைவெளி எடுப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாடி வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க

இப்போதெல்லாம் 'கிளீன் ஷேவ்' செய்த ஆண்களை விட, தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. இதனால் ஆண்கள் பலர்...

நீரிழிவு நோய்.. அதிக தாகம் எடுப்பதற்கான காரணம்?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அதிகமான தண்ணீர் தாகம் மருத்துவ ரீதியாக 'பாலிடிப்சியா' அல்லது 'தாகமிகுமை' என்று அழைக்கப்படுகிறது. இது...

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்?

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும்...