follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

Published on

ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார். இது குறித்து டிரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வந்தன. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் கூறியுள்ளார்.

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனால் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் கூறியது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...