follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

Published on

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்களை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2025 இல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இந்தப் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டபோது, ​​ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சியும் பல சபைகளில் அதிகாரத்தைப் பெற்றன. இதை அவதானித்த, தற்போதைய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாற்றி செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​நேற்று (16) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டார்.

இந்த வழிகாட்டுதல்களின் பக்கம் 7 இல் இரகசிய வாக்கெடுப்பு அல்லது திறந்த வாக்கெடுப்பு நடத்துவது குறித்து கருத்துகளை கோருவது எங்ஙகனம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்து எவ்வாறு கேட்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இது இவ்வாறு இருக்க ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சியும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுவதன் ஊடாக சபைகளில் அதிகாரங்களை கைப்பற்றியதன் காரணமாக, தன்னிச்சையாக இந்த வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான அதிகாரிகளும் உள்ளூராட்சி ஆணையர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டுதல்களை உரிய வகையில் செயல்படுத்திய உள்ளூராட்சி ஆணையர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கொழும்பு மாநகர சபையின் 60 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு திறந்த வாக்கெடுப்பைக் கோரும்போது, ​​அந்தக் கோரிக்கை எவ்வாறு புறக்கணிக்கப்படது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களை மாற்றி தமக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதற்கும், திட்டத்தை செயல்படுத்துவதற்கும் செல்வாக்கு செலுத்திய தரப்பினர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இது குறித்து வினவப்பட்ட போது கூட, இந்த வழிகாட்டுதல்களைப் பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறி கொழும்பு மாநகர சபை உட்பட ஏராளமான உள்ளூராட்சி நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்திற்கு விழுந்த பெரும் அடி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த வழிகாட்டுதல்களிலிருந்து விலகி நடப்பதற்கு மேல் மட்டத்தில் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்ததா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் இன்று பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையாகும். ஒரு பிரதேசத்தில் வெளிப்படையான வாக்கெடுப்பும், மற்றொரு பிரதேசத்தில் இரகசிய வாக்கெடுப்பும் நடத்துவதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக எடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...