follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2பெண்கள் 'டி-20' உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

பெண்கள் ‘டி-20’ உலக கிண்ணம் : அட்டவணை வெளியீடு

Published on

பெண்களுக்கான ‘டி-20’ உலக கிண்ண அட்டவணை வெளியானது. பைனல் (2026, ஜூலை 5), லார்ட்சில் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ‘டி-20’ உலக கிண்ண தொடர் நடத்தப்படுகிறது.

இதன் 10வது தொடர் அடுத்த ஆண்டு (ஜூன் 12 – ஜூலை 5) இங்கிலாந்தில் நடக்கவுள்ளது.

இத்தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. 24 நாட்களில் இறுதி, அரையிறுதி உட்பட 33 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்காக பர்மிங்காம், பிரிஸ்டோல், லீட்ஸ், லண்டன் லார்ட்ஸ், லண்டன் ஓவல், மான்செஸ்டர், சவுத்தாம்டன் என 7 இடங்கள் தேர்வாகின.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து, ‘நடப்பு சாம்பியன்’ நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள 4 இடத்துக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும். மொத்தமுள்ள 12 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடும். முடிவில், ‘டாப்-2’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் 2 அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

2026, ஜூன் 14ல் (பர்மிங்காம்) தனது முதல் லீக் போட்டியில் களமிறங்கும் இந்தியா, அதன்பின் ஜூன் 17 (லீட்ஸ், தகுதிச் சுற்று அணி), ஜூன் 21 (மான்செஸ்டர், எதிர்: தென் ஆப்ரிக்கா), ஜூன் 25 (மான்செஸ்டர், தகுதிச் சுற்று அணி), ஜூன் 28ல் (லார்ட்ஸ், எதிர்: ஆஸி.,) விளையாடுகிறது.

இரண்டு அரையிறுதி போட்டிகளும் (ஜூன் 30, ஜூலை 2) லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளன. பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5ல் இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...

நாளை முதல் வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம்

கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வரும் கடுகதி ரயில் சேவையை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து...