follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP1துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

Published on

அநுராதபுரம் – திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது இன்னும் தகவல் வௌியாகவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்தவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம்...

அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்...

கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்து

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...